Raja Gopurams in Nov-2011

குமர கோயில்


மெய்கண்டமூர்த்தி சுவாமி திருக்கோயில் - நாகபட்டினம்  
காலம் முழுதும் கந்தற்கே கவிகள் அறைந்த்துய்த் தவரென்றிஞ், ஞாலம் இறைஞ்சும் அருணகிரி நாதர் திருவாய் மலர்ந்தநறும்,
சீலம் மிகுசந் தக்
கவிகள் தெரித்துப் பரவி மெய்கண்ட, வேலன் அருளுக்காளான மேலோர் பலர்வாழ் வதுநாகை

தல வரலாறு
பாடல்கள்
நிகழ்வுகள்
புகைப்படங்கள்
ஆவணங்கள்
செல்வது எப்படி
அருகாமையில்
இணைய முகவரிகள்
முதற்பக்கம் செல்லதிருத்தலத்துடன் தொடர்புடைய பாடல்கள்

1. அருட்கவி அழகுமுத்து புலவர் இயற்றிய மெய்கண்ட வேலாயுத சதகம்

திருமுருகப்பிரானது பொருள் சேர் புகழ்களைக்கூறும் துதிநூல் திருப்புகழாகும். இதனை அருளிச்செய்தவர் பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதராவார். இவர் முருகனது ஆறுபடை வீடுகளுக்கு மட்டுமன்றி சிறப்புடைய தலங்கள் எங்கெங்கு உண்டோ அங்கங்கெல்லாம் எழுந்தருளியுள்ள முருகனுக்கு திருப்புகழ்ப் பாக்கள் பாடியுள்ளார். அந்த வரிசையில் நாகை முருகன் பேரிலும் திருப்புகழ்ப்பாக்கள் உள்ளன.  அருணகிரி நாதர் வாழ்ந்த காலத்தை கருத்தில் கொண்டால், இப்பாக்கள், நாகை அருள்மிகு நீலாயதாட்சி அம்மன் உடனுறை காயாரோகண சுவாமி திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானை குறித்து பாடப்பெற்றவை என்பது புலனாகும். 

இவ்வாறு எண்ணிறந்த செய்யுட்களோடு கூடிய திருப்புகழ் அமுதை அருந்தி முருகன் திருவருள் பெற்ற பெருமக்கள் பலராவர். அவர்களில் நாகை முருகன் புகழ்ப்பாவை ஓதி அவனருளைப் பெற்று நனிபெற வாழ்ந்தவர் நாகை அழகுமுத்துப் புலவராவர். இவர் நீலாயதாட்சி அம்மன் வடக்கு வீதியில் வாழ்ந்த சேனத் தலைவர் மரபில் வந்த அம்பலவாணச் செட்டியாரும் அவர்தம் மனைவி சிவகாமசுந்தரி அம்மையாரும் செய்த அருந்தவப் பயனாய் புத்திரராகப் பிறந்து அழகுமுத்து என்ற இயற்பெயர் பூண்டு மெய்கண்டமூர்த்தி கோவிலில் மெய்காவல் பணியை மேற்கண்டு வாழ்ந்து வந்தார். வினைவயத்தால் தோன்றிய நோய் காரணமாக இவர் உடல்நிலை சரியில்லாதிருந்து முருகப்பிரானிடத்து அளவிறந்த பக்திபூண்டு நாளும் அவனை மனமுருகி வழிபட்டு வந்தார். சின்னாளில் அப்பெருமான் அருளால் இவரது நோய் நீங்கி நல்லுடல் பெற்று அத்துடன் பாடும் ஆற்றலும் பெற்ற பரம கவியானார். இதனால் இவருக்கு அருட்கவி அழகுமுத்துப்புலவர் எனத் திருப்பெயர் உண்டாயிற்று. அருட்கவி அவர்கள் மெய்கண்ட வேலவர்மீது வேலாயுத சதகம், திறப்புகழ் என்ற இரு நூல்கள் பாடியுள்ளார். இவ்வருட் புலவர் தன் வாழ்நாள் இறுதியில் தலயாத்திரை பூண்டு சீர்காழியில் இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தார். ஓர் சித்திரை மாத சதய நாள் அன்று மாலை வேளையில் திடுமென ஆவிநீத்து ஆண்டவன் அடியிணைகளை அடைந்தார். அதே வேளையில் நாகை மெய்கண்ட வேலவர் கோவிலின் உள்ளே அன்பர்கள் எல்லாம் பார்த்திருக்க புலவரவர்கள் பூத உடலோடு கந்தவேள் எழுந்தருளியுள்ள கரு அறையுள் நுழைந்ததாகவும் பின் காணவில்லை என்றும் கூறுவர். இவ் அற்புத நிகழ்ச்சியைக் கண்டு அதிசயித்தோர் பின் புலவர் அவர்களுக்கு இக்கோவிலின் உள்ளே திருஉரு அமைத்து வழிபடுவாராயினர்.

இவர் பாடிய திறப்புகழ் என்ற நூல் திருப்புகழைப் போன்றது. முருகனது திறத்தை வியந்துபல வகைப்பட்ட இசையுடன் அவனது புகழைப் பாடுவதால் இது திறப்புகழ் எனப்பட்டது.  திருப்புகழைப் போல பலவகைச் சந்தங்களோடு கூடிய வண்ணப்பாவாக விளங்கும்இப்புகழ் பாமாலையை பூண்ட திருநாகை முருகனை துதித்து வழிபட்டு உய்வோமாக.

 


Home Contact